திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் விற்பனை மந்தம்
திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட்டில் ரூ.2000க்கு விற்ற மல்லிகை ரூ.800க்கு விற்பனை. திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட்டிற்கு நிலக்கோட்டை, செம்பட்டி, வெள்ளோடு, மைலாப்பூர், ரெட்டியார் சத்திரம், ஜம்புலியம்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் அதிகளவு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
பெண்கள் தலைக்கு வைக்கும் மல்லிகை, முல்லை, ஜாதி பூ, காக்கரட்டான் ஆகியவையும், மாலைக்கு பயன்படுத்தும் கோழிக்கொண்டை, சம்பங்கி, ரோஸ், வாடா மல்லி, செண்டு மல்லி உள்ளிட்ட பூக்களும் தினந்தோறும் விற்பனைக்கு வருகிறது. இங்கிருந்து கேரளா, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு குறைந்தது 10 டன் பூக்களும் விஷேச தினங்களில் 40 டன் பூக்கள் வரையும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த 2 நாட்கள் முன்பு ஆயுதபூஜை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடு உயர்ந்து மல்லிகை கிலோ ரூ.1200க்கு விற்க்கபட்டது. இன்று மார்க்கெட்டிற்கு 15 டன் பூக்கள் வரத்து வந்துள்ளது. முகூர்த்தம் மற்றும் விஷேச தினங்கள் குறைவு எதிரொலியால் மார்க்கெட் வெறிச்சோடி, விற்பனை மந்தமாக காணப்பட்டது.
இதனையடுத்து கோழிக்கொண்டை ஒரு கிலோ ரூ. 60, செண்டு மல்லி கிலோ ரூ.15, அரளி ரூ. 40, வாடாமல்லி ரூ. 20, செண்டு மல்லி ரூ. 40, பன்னீர் ரோஸ் ரூ. 120, சம்மங்கி ரூ.30, செவ்வந்தி ரூ.30, அரளி ரூ.120க்கும் விற்கப்பட்டது. அதேபோல் தொடர் மழை, பனிப்பொழிவு காரணமாக மல்லிகை வரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கிலோ ரூ. 800க்கு விற்கப்பட்டது. கனகாம்பரம் ரூ.500, காக்கரட்டான் ரூ.200, முல்லை ரூ. 250, கனகாம்பரம் ரூ.300, ஜாதி பூ ரூ.250 க்கு விலைபோனது.