விருதுநகர்: சமத்துவ பொங்கலில் பங்கேற்ற வெளிநாட்டினர்

விருதுநகரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் தமிழக பாரம்பரிய இசைக்கு நடனமாடிய வெளிநாட்டினர் விளையாட்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று அசத்தினர்.

Update: 2024-01-15 10:18 GMT
சமத்துவ பொங்கல் விழா-தமிழக பாரம்பரிய இசைக்கு நடனமாடிய வெளிநாட்டினர் விளையாட்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று அசத்தல்*-தமிழ் பாரம்பரியம் தங்களை கவர்ந்துள்ளதாக பேட்டி
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சிறுக்குளம் கிராமத்தில் இன்று சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்த சமுத்துவ பொங்கல் விழாவில் பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
 இவ்விழாவில் பாரம்பரிய முறைப்படி வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மற்றும் முக்கிய விருந்தினர்களை மாலை அணிவித்து, சந்தனம் குங்குமமிட்டு மேளதாளம் முழங்க வரவேற்று மாட்டு வண்டிகளில் அழைத்துச்சென்று, சிறுக்குளம் கிராம மக்கள் போட்ட கோலங்களை பார்வையிட்டு பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டு நிகழ்வில் கலந்து கொண்டனர். 
மேலும் பரத நாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், காளை ஆட்டம், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.மேலும் உறியடித்தல்,பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் போன்ற விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. 
இதில் விழாவிற்கு வந்திருந்த வெளிநாட்டினர் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றனர். வெற்றி பெற்ற வெளிநாட்டினர் உள்ளிட்ட அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் சான்றிதழ் களையும் பரிசுகளையும் வழங்கினார். 
சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி பேட்ரிக் அளித்த பேட்டியில் கடந்த 8 ஆண்டுகளாக இந்தியா வருவதாகவும் குறிப்பாக தமிழகம் வந்து தைப்பொங்கல் விழாவை கண்டுகளிப்பதாகவும்,குறிப்பாக சுவை மிகுந்த அரிசிப்பொங்கலோடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியையும் பார்த்து வருவதாகவும்,இன்று நடைபெற்ற விழா மிகவும் அருமையாக இருந்ததாகவும் தமிழக கிராம மக்களின் அன்பான புன்னகை தனக்கு மிகவும் பிடித்து உள்ளதாகவும் பல பாரம்பரியங் களை கொண்டதாக தமிழகம் விளங்குவதாகவும்,பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தொடர்ந்து ஆண்டு தோறும் தமிழகம் வர தீர்மானித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்விழாவில் திட்ட இயக்குநர் தண்டபாணி, மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் திருமதி உமாதேவி, மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News