தரைப்பாலத்தில் மணல்: வாகன ஓட்டிகள் அவதி
ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் தரைப்பாலத்தில் மணல்: வாகன ஓட்டிகள் அவதி.;
Update: 2024-04-09 16:15 GMT
அகற்றப்படாத மணல்
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில், வெள்ளாத்துார் ஓடை குறுக்கிடுகிறது. இந்த பகுதியில் இருந்த சிறிய பாலம் இடிக்கப்பட்டு, புதிதாக மீண்டும் கட்டப்பட்டது. கடந்த ஆறு மாதங்களாக நடந்து வந்த கட்டுமான பணி சமீபத்தில் நிறைவடைந்தது. கடந்த வாரம் இந்த பாலம், போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டது. ஆனால், பாலம் முழுதும் மணல் மற்றும் ஜல்லிக்கற்கள் அகற்றப்படாமல் குவிந்துள்ளன. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பாலத்தை கடந்து செல்கின்றனர். வாகனங்கள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இந்த பாலத்தை கடந்து தினசரி நுாற்றுகக்கணக்கான கனரக வாகனங்களும், தொலைதுார பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. பாலத்தில் குவிந்துள்ள மணல் மற்றும் ஜல்லிக்கற்களை அகற்ற வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்