ஆம்பூரில் மணல் கடத்தல் - வாகனங்கள் பறிமுதல்

Update: 2023-11-03 07:44 GMT

பறிமுதல் செய்யப்பட மாட்டு வண்டி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் உள்ள பாலாற்றில் அதிக அளவு மணல் கடத்தி செல்லப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பாலாற்றில் மணல் கடத்துபவர்களை பிடிக்க போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் ஆம்பூரை சுற்றியுள்ள பாலாறு படுக்கையில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது, தேவலாபுரம் பாலாற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்த 7 மாட்டு வண்டிகள் மற்றும் 10 மாடுகளை தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்து உமராபாத் காவல்நிலைத்தில் ஒப்படைத்தனர். மேலும் வாணியம்பாடியில் பாலாற்றின் கரையோரம் அனுமதியின்றி மண் அள்ளிக்கொண்டிருந்த டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி இயந்திரத்தையும் தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.. இதனை தொடர்ந்து தப்பியோடிய மணல் கடத்தல்காரர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பாலாற்றில் மணல் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News