குதிரை வாகனத்தில் எழுந்தருளிய சங்கரேஸ்வரர்

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவிலில் சங்கரேஸ்வரர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Update: 2024-01-19 01:19 GMT

சங்கரேஸ்வரர் 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அமைந்துள்ள சங்கரநாராயணர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலம் ஆகும். ஹரியும், சிவனும் ஒரே ரூபமாக அமைந்திருப்பது இந்த கோவிலின் தனிச்சிறப்பாகும். சங்கரேஸ்வரர் மற்றும் சங்கரேஸ்வரர் சுவாமிகள் சங்கரநாராயணன் திருக்கோவிலுக்கு பின்னால் அமைந்திருக்கும் மண்டபத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அபிஷேக, ஆராதனைகள் மற்றும் பூஜைகளை நடைபெற்றது. பூஜையின் போது கருப்பு உடையில் முகமூடிகள் அணிந்து வந்த ஒருவர் சுவாமியின் மணி மற்றும் செம்பை களவாடியதாகவும், திருடனை பிடிக்க சங்கரேஸ்வரர் குதிரை வாகனத்தில் வந்து அவனை கண்டுபிடித்ததாகவும் நம்பப்படுகிறது.கள்வனை கண்டுபிடித்ததால் சங்கரேஸ்வரரை , கல்லாலி சாமி என்றும் கூறுவர். இதில் திரளான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு குதிரை வாகனத்தில் எழுந்தருளிய சங்கரேஸ்வரரை வழிபட்டனர் .
Tags:    

Similar News