சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலையின் சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
வேலூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வேலூர் பகுதி முழுவதும் கொட்டப்படும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் மூலம் வாகனங்களில் எடுத்து வந்து மட்கும் குப்பை,மட்கா குப்பை தனித்தனியாக பிரித்து எடுப்பதற்காக இடம் பால் குழிரூட்டும் நிலையம் அருகே அதற்கான குப்பை கிடங்கு இயங்கி வருகிறது.
ஆனால் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை அங்கு கொண்டு செல்லாமல் பரமத்தி வேலூர் காவிரி பாலம் சோதணை சாவடி அருகே சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகின்றது. மேலும் கொட்டப்படும் குப்பைகளை தீ வைத்து எரிக்கப்படுவதால் அவ்வழியாக செல்லும் பேருந்துகள்,வாக ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. அங்கு கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் ஏற்பட்டும் தீ வைத்து எரிக்கப்படுவதால் அதனால் எழும் புகைகளால் நோய் தொற்று ஏற்படும் சூழல் உள்ளது.
கொட்டப்படும் குப்பைகளில் தீ வைப்பதால் ஏற்படும் புகையால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகமும்,வேலூர் பேரூராட்சி நிர்வாகமும் இதற்கு நிரந்திர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.