பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் மனு

பெரம்பலூரில் மாத ஊதியத்தை வழங்க கோரி தூய்மை பணியாளர்கள். மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2024-01-06 16:25 GMT

மனு அளிக்க வந்த தூய்மைபணியாளர்கள்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் ஊராட்சியில் 12 நிரந்தர தூய்மை பணியாளர்கள், 20தற்காலிக தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 32 தூய்மைபணியாளர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு மாதம் ரூ2500 சம்பளம் பெற்றுவந்தநிலையில் கடந்த 2023-செப்டம்பர் மாதம் ரூ5000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்தமாதம் முதல் இதுவரை 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பெரும் சிரமத்துக்குள்ளான வி.களத்தூர் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கொடுத்தனர். நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் தங்களுக்கு இதை விட்டால் வருமானத்திற்கு வேறு வழி இல்லை, இதை வைத்து தான் தங்களது குடும்பத்தை வாழ்வாதாரம் செய்து வருகிறோம்.

சம்பளம் பற்றி வி.களத்தூர் ஊராட்சி தலைவர் பிரபுவை பார்க்க முடியவில்லை இது சம்பந்தமாக வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம் ஆகையால் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களது நிலுவை சம்பளத் தொகையை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மனு அளித்துள்ளனர்.

மேலும் கடந்த இரண்டு மாதம் முன்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் வி.களத்தூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பிரபு ஊராட்சி மன்ற நிதியை 14 லட்சம் முறைகேடு செய்ததாக இவர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ததுள்ளதும், தற்பொழுது ஊராட்சி மன்ற தலைவர் பிரபு தலைமறைவாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News