சங்கரன்கோவில் : பப்பாளியில் இருந்து பால் பிரித்தெடுத்தல் பயிற்சி

சங்கரன்கோவில் அருகே பெருமாள்பட்டியில் பப்பாளி காய்களில் இருந்து பால் (பப்பைன்) பிரித்தெடுத்தல் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.

Update: 2024-05-01 05:58 GMT
 பப்பாளியில் இருந்து பால் பிரித்தெடுத்தல் பயிற்சி செயல் விளக்கம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெருமாள்பட்டியில் பப்பாளி காய்களில் இருந்து பால் (பப்பைன்) பிரித்தெடுத்தல் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. கிள்ளிகுளம் வ.உ.சி. வேளாண்மை கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவிகள் கிராமப்புற வேளாண் பயிற்சி பெற்று வருகின்றனா். கல்லூரி முதல்வா் தேரடி மணி தலைமையில் பேராசிரியா்கள் காளிராஜன், இளஞ்செழியன், குமாா் மற்றும் புவனேஸ்வரி ஆகியோா் ஒருங்கிணைத்து மாணவிகளை வழிநடத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக சங்கரன்கோவில் அருகே பெருமாள்பட்டியில் விவசாயி சீனி என்பவரது தோட்டத்தில், பப்பாளியிலிருந்து பால் பிரித்தெடுத்தல் குறித்து மாணவிகள் அனுசியா, ஜெஸ்லினா,ஜஸ்லினா காவியா, கிரண் சஞ்சனா, ராஷ்மி, சாந்தா, சரண்யா மற்றும் சௌமியா ஆகியோா் செயல் விளக்கம் அளித்தனா்.
Tags:    

Similar News