காவல்துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் காவல் துறையினர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் நேற்று மாலை தென்காசி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் போலீசார் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கரன்கோவில் தாலுகா செயலாளர் அசோக் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் துணை பொதுச் செயலாளர் சுகந்தி, மாநில குழு உறுப்பினர் கே.ஜி பாஸ்கரன், தென்காசி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், தீண்டாமை ஒழிப்பு தென்காசி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் பால்ராஜ், துணைத் தலைவர் சி.கே குமார், மாவட்ட குழு உறுப்பினர் உச்சி மாகாளி, வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் நடராஜன் உள்ளிட்ட ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.