திருமணத் தடை நீங்கும் திருமணஞ்சேரியில் சப்பர திருவிழா

மயிலாடுதுறை பிரசித்தி பெற்ற திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயிலில் சப்பர திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.;

Update: 2024-02-20 01:30 GMT

சப்பர திருவிழா 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் பிரசித்தி பெற்ற திருமணஞ்சேரி கோகிலாம்பாள் சமேத உத்வாகநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது இக்கோயிலின் மாசி மக பெருவிழா கடந்த 14-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, மறுநாள் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடனும் தொடங்கியது விழாவின் முக்கிய உற்சவங்களில் ஒன்றான சப்பரத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோகிலாம்பாள் அம்பாள் மற்றும் சமேத உத்வாகநாதர் சுவாமி உற்சவமூர்த்திகள் 2 ஓலை சப்பரத்தில் தனித்தனியே எழுந்தருள செய்யப்பட்டு, கோயிலின் நான்கு வீதிகளின் வழியே பக்தர்கள் ஊர்வலமாக இழுத்து வந்தனர். வழியெங்கும் பக்தர்கள் சுவாமி அம்பாளுக்கு தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
Tags:    

Similar News