சேலையில் தீ பிடித்து மூதாட்டி உயிரிழப்பு
காரிமங்கலம் அருகே 75 வயது மூதாட்டி சேலையில் தீப்பிடித்து உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை;
Update: 2024-04-30 06:33 GMT
காவல்துறை விசாரணை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் அடுத்த கிட்டேசம்பட்டி கிராமத்தைசேர்ந்தவர் முத்துவேடி தனது மகன் வீட்டு அருகே உள்ள குடிசையில் வசித்து வந்தார். இதற்கிடையே முத்துவேடி வீட்டில் நேற்று மாலைபூஜை செய்வதற்காக ஊதுபத்தியை பற்ற வைக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அவருடைய சேலையில் தீப்பிடித்தது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த முத்துவேடியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியி லேயே அவர் இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.