சாஸ்த்ரா பல்கலைக்கழகம் - சென்னை நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சாஸ்த்ரா பல்கலைக்கழகம் - சென்னை நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Update: 2024-07-06 06:16 GMT

புரிந்துணர்வு ஒப்பந்தம்

தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் சென்னை இன்டலெக்ட்டிசைன் அரினா நிறுவனத்தின் அங்கமன ஸ்கல் ஆப் டிசைன் திங்கிங் இடையே ஒரு புரித்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் இதர கல்வியாளர்களுக்கு பயிற்சி பட்டறை, கருத்தரங்கு மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் வாயிலாக டிசைன் திங்கிங் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. சாஸ்த்ரா பல்கலைக்கழக டீன் பத்ரிநாத் புரிந்துணர்வு ஒப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பேசுகையில், டிசைன் திங்கிங் என்பது மாணவர்களுக்கு பிரச்னைகளை தீர்த்தல் படைப்பாற்றல், புதுமை மற்றும் குழு திறன்களை வளர்ப்பதில் உதவுகிறது. மாணவர் வேலைவாய்ப்புகளை பெறுவதில் உதவுகிறது. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் உறுதுணையாக உள்ளது" என்றார். இண்டெலெக்ட் டிசைன் அரினா சார்பாக ஸ்கூல் ஆப் டிசைன் திங்கிங் தலைவர் அன்பு ரத்தினவேல் கையொப்பமிட்டார். நிகழ்ச்சியில் சாஸ்த்ரா பல்கலைக்கழக பதிவாளர் சந்திரமவுலி, மெக்கானிக்கல் பொறியியல் துறை தலைவர் புகழேந்தி ஆகியோரும் பங்கேற்றனர் இன்டெலெக்ட் டிசைன் அரிளா நிறுவன நிர்வாகிகள் சென்னையிலிருந்து மெய்நிகர் தொழில்நுட்பத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஸ்கூல் ஆப் டிசைன் திங்கிங்ன் மூத்த ஆசிரியர் ராம்நாத் பிரபு நன்றி கூறினார்
Tags:    

Similar News