சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா

சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் நடந்த சனிப்பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-12-22 04:33 GMT

சனிப்பெயர்ச்சி

சின்னசேலம் தென்பென்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. நேற்று முன்தினம் மாலை 5:20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியானார். அதனைத் தொடர்ந்து சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். சிவாச்சாரியார் ஸ்ரீதர் தலைமையிலான குழுவினர் பூஜைகளை செய்தனர்.
Tags:    

Similar News