இளைஞரிடம் நூதன முறையில் மோசடி
காளையார்கோவில் அருகே ஆன்லைன் மூலம் இளைஞரிடம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்;
Update: 2024-01-19 12:28 GMT
காளையார்கோவில் அருகே ஆன்லைன் மூலம் இளைஞரிடம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே அழகாபுரியை சேர்ந்த 29 வயது இளைஞருக்கு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து லோன் தருவதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதை நம்பிய அந்த இளைஞர் அந்த குறுஞ்செய்தியில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்கள் டாக்குமென்ட் கட்டணமாக ரூ.20 ஆயிரத்து 300 கேட்டுள்ளனர். அவர்கள் கூறிய வங்கி எண்ணிற்கு பணத்தை இரு தவணைகளாக அவர் செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்டு மேலும் அவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்த நிலையிலும், லோன் தராததால் இழுத்தடித்து நிலையிலும் பாதிக்கப்பட்ட நபர் சிவகங்கை சைபர் கிரைம் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்