பழங்குடியினர் சாதி சான்று வழங்கக்கோரி பள்ளி குழந்தைகள் போராட்டம்

மதுரையில் காட்டு நாயக்கன் சமூக மாணவர்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க கோரி பள்ளி குழந்தைகள் இலை, தழைகளுடன் நடனமாடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். .

Update: 2024-06-28 07:30 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்

மதுரை மாவ்ட்டம் அந்தனேரி, எஸ்.ஆலங்குளம், மகா கணபதிபுரம் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் காட்டு நாயக்கன் பழங்குடியினர் மக்களுக்கு கடந்த 47 ஆண்டுகளாக வெவ்வேறு காலகட்டங்களில் பழங்குடி சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது ஏராளமான காட்டுநாயக்கன் பழங்குடியினர் குடும்பத்தினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதில் 1 ஆண்டாக தாமதப்படுத்துவதாக கூறி மதுரை கோட்டாட்சியர் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி காட்டுநாயக்கன் பழங்குடியினரை சேர்ந்த ஏராளமான குடும்பத்தினர் தங்களது குடும்பத்தில் உள்ள குழந்தைகள் பள்ளிகளை புறக்கணித்து இலை, தழைகளை அணிந்தவாறும், முகத்தில் கரும்புள்ளி குத்தியபடியும், விலங்குகளை பிடிக்கும் கூண்டுகள், இலை, தலையுடன் நடனமாடியும் நூதன முறையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை திருவள்ளுவர் சிலை அருகே நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர், கோட்டாச்சியரிடம் பலமுறை மனு அளித்த நிலையிலும் நிலுவையில் உள்ள ஜாதி சான்றிதழ்களை வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் ஜாதி சான்றிதழ் வழங்கும் வரை தங்களது போராட்டம் நீடிக்கும் என கூறி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News