திருச்சி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
துறையூர் அருகே அரசு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-23 15:06 GMT
கோப்பு படம்
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்ச பெருமாள்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் சென்னையில் பணியாற்றி வருகிறார் இவரது மனைவி நாமக்கலில் பணியாற்றி வருகிறார் இவர்களது மகள் மெர்சி (14). பச்ச பெருமாள் பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.
அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு பிடித்து வந்த மெர்சி வீட்டில் பாட்டி இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தற்கொலைக்கான காரணம் என்ன என விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது