பள்ளி ஆய்வக உதவியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்
பள்ளி ஆய்வக உதவியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார்.
மாநில இணை ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், மாவட்ட ஆலோசகர்கள் பழனி, விஜயகுமார் முன்னிலை வகித்தனர். பொருளாளர் குமாரி வரவேற்றார். கூட்டத்தில், பதவி உயர்வு இல்லாத ஆய்வக உதவியாளர்களின் 10 ஆண்டுகள் முடித்து தேர்வு நிலையில் தர ஊதியத்தை உயர்த்த வேண்டும்.
வரும் கல்வியாண்டில் அனைத்து ஆய்வக உதவியாளர்கள் ஆய்வக பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில பொறுப்பாளர்கள் அன்பு, பூரங்கன் உட்பட பலர் பங்கேற்றனர். செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார்.