பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம் நடைபெற்றது;

Update: 2024-05-06 08:45 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம் பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமையில் நடைபெற்றது.

பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர் பிரதிநிதி செல்வகுமார் வரவேற்று பேசினார் கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்துலட்சுமி உறுப்பினர்கள் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன், இல்லம் தேடி தன்னார்வலர் கார்த்திகா, உதவி தலைவர் சங்கீதா, உறுப்பினர்கள் செங்குட்டுவன் ,சங்கர் சித்ரா ,பரிதாபேகம், கோமதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள் இக்கூட்டத்தில் பொதுத்தேர்வு 10, 11, 12 வகுப்பு மாணவர்களில்,

தேர்வுக்கு வராதவர்கள் எவரென கண்டறிவதற்கும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வு எழுத ஊக்கப்படுத்துவதற்கும் தேர்ச்சி பெற்றவர்கள் உயர்கல்வி குறித்தான வழிகாட்டுதல்களை பெறுவது குறித்தும் விழிப்புணர்வு வழங்குவது எனவும் பள்ளிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை முறைப்படுத்துதல் ஆகியவை அவசியம் குறித்து அறிவுறுத்தப்பட்டது

Tags:    

Similar News