மாணவர் துாக்கிட்டு தற்கொலை
கள்ளக்குறிச்சி: போதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-17 05:05 GMT
கோப்பு படம்
கள்ளக்குறிச்சியில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனமுடைந்த மாணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி, கோட்டைமேட்டைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் தர்ஷன்,16; தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத்தேர்வினை எழுதினார். தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், தர்ஷன் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மனமுடைந்த அவர், நேற்று காலை 10:15 மணியளவில் வீட்டில் துாக்கு போட்டுக் கொண்டார். உடன் அவரது பெற்றோர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே தர்ஷன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.