பள்ளிகள் கோடைகால சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது: தமாகா யுவராஜ்

பள்ளிகள் கோடைகால சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என தமாகா யுவராஜ் மனு அளித்துள்ளார்.;

Update: 2024-04-25 08:49 GMT

யுவராஜ்

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கோடை கால சிறப்பு வகுப்புகளை நடத்தாமல் பள்ளிக ளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமாகா கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமாகா மாநில இளைஞரணி தலைவர் எம்.யுவ ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈரோடு மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வெயில் கடுமையாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயில் மே மாதத்தில் 113 டிகிரி வரை உயரலாம் என்ற தகவல் மக்களை அச்சுறுத்தி வருகிறது. நடப்பாண்டு ஈரோட்டில் 109.4 டிகிரி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 15 நாள்களாக வெயில் படிப்படியாக உயர்ந்து தமிழகத்தின் அதிகபட்ச வெப்பம் ஈரோடு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

எனவே. கடும் வெப்பத்தைக் கருத்தில் கொண்டு பள்ளி களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதை நிறுத்த வேண்டும். அரசு ஒவ்வோர் ஆண்டும் 2 கோடி மரங் களை நடுவதாகக் கூறுகிறது. ஆனால் மற் றொரு பக்கம் வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் சுற்றுச் சூழல் மாசு, இயற்கை மாறுபா டுக்கு எதிராக போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை களை எடுக்க வேண்டும்.

மேலும், இயற்கை யைப் பாதுகாப்பது குறித்த செயல் பாடுகளை அரசும், மக்களும் முன்னெ டுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags:    

Similar News