ராசி இண்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ராசிபுரம் ராசி இண்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளியில் சர்வதேச அறிவியல் தினத்தை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்கள் உருவாக்கிய அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

Update: 2023-11-16 12:40 GMT
ராசி இண்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ராசி இண்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளியில் சர்வதேச அறிவியல் தினத்தை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்கள் உருவாக்கிய அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதற்கான துவக்க விழாவில், பள்ளியின் தாளாளர் எஸ்.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். முதல்வர் டி.வித்யாசாகர் வரவேற்றுப் பேசினார்.

இஸ்ரோ ஒய்வு பெற்ற விஞ்ஞானி இளங்கோ சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டுப் பேசினார். முன்னதாக அறிவியல் கண்காட்சியில் , ஸ்ரீஹரிகோட்டோவில் விண்கலம் ஏவப்படுவதுபோல் பள்ளி கட்டிடத்தினை பயன்படுத்தி சந்திராயன் மாதிரி விண்கலம் மாணவர்களால் உயரத்தில் ஏவப்பட்டதை பார்வையிட்டனர்.

கண்காட்சியில் இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் ஆகிய துறைகள் சார்ந்த கண்டுபிடிப்புகள் மாணவர்களால் உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து பார்வையாளர்களிடம் மாணவர்கள் விளக்கி செயல்படுத்திக் காட்டினர். கண்காட்சியில் 3டி காட்சி மற்றும் கம்ப்யூட்டர் விளக்க படங்களும் இடம் பெற்றிருந்தன.

விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர் விஞ்ஞானி இளங்கோ விண்கலம் உருவாக்கம், ஏவப்படும் நடைமுறைகள், பயன்பாடு போன்றவை குறித்தும், அறிவியல் சிந்தனைகள் வளர்த்துக்கொள்ளும் முறைகள் குறித்தும் மாணவர்களிடையே பேசினார். கண்காட்சி ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியரும், ஒருங்கிணைப்பாளருமான எம். ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பள்ளி பொருளாளர் எஸ்.மாதேஸ்வரி சத்தியமூர்த்தி உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News