ராஜாதேசிங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

செஞ்சி ராஜாதேசிங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவர்களை பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டினர்.

Update: 2024-01-07 03:00 GMT

அறிவியல் கண்காட்சி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கலையூர் நாட்டார்மங்கலத்தில் உள்ள ராஜா தேசிங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடை பெற்றது. இதற்கு ராஜா தேசிங்கு கல்வி குழும தலைவர் செஞ்சி பாபு தலைமை தாங்கி, கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வை யிட்டார். இதில் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவிகள் தங்களது படைப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தி யிருந்தனர். இதனை அருகில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பார்வையிட்டனர், திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பான படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவர்களை அனைவரும் பாராட்டினர், இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் அய்யப்பன், பொருளாளர் அண்ணாமலை, உறுப்பினர்கள் ராஜாராம், அங்கவை பாபு, அரவிந்தன், வெங்கடசுப்பிரமணியன், கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் மற்றும் துறைத்தலைவர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். கண்காட்சியை பார்வையிட கல்லூரி நிர்வாகம் சார்பில் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Tags:    

Similar News