திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாளை முதல் அறிவியல் கண்காட்சி

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நாளை முதல் 10 ஆம் தேதி வரை அறிவியல் கண்காட்சி நடக்க இருப்பதாக துணைவேந்தர் ஆறுமுகம் தெரிவித்தார்.

Update: 2024-02-06 05:00 GMT

துணைவேந்தர் ஆறுமுகம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சேர்காடு பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் ஆறுமுகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் கடந்த 22 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக 7 தேதி முதல் 10 ஆம் தேதி வரை அறிவியல் கண்காட்சி. நடத்தப்படுகிறது. வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாணவர்களிடையே அறிவியல் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளவும் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வைக்கும் வகையில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட இருப்பதாக கூறினார்.

அறிவியல் கண்காட்சியில் அதிகமான மாணவர்கள் பங்கேற்று தங்களுடைய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தலாம் .மேலும் இந்த அறிவியல் கண்காட்சியில் 10 தலைப்புகளில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட இருப்பதாகவும் கூறினார். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு இ- மேனேஜ்மென்ட் என்ற செயலி துவக்கப்பட்டுள்ளது. இது கல்லூரி மாணவர்கள் தங்களது மதிப்பெண்கள் மற்றும் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். நடப்புக் கல்வியாண்டில் நுண்ணறிவியல், சுற்றுச்சூழல் சமூக அறிவியல் ஆகிய 3 துறைகள் துவக்கப்பட்டு இருப்பதாகவும் இதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

Tags:    

Similar News