புதிய கண்டுபிடிப்புகளில் விஞ்ஞானிகள் ஈடுபடணும் !

வருங்கால சமுதாயத்தினர் நோய் இல்லாமல் வாழ, புதிய கண்டுபிடிப்புகளில் விஞ்ஞானிகள் ஈடுபட வேண்டும் என, அறிவியல், தொழில் நுட்பத் துறை இணைச் செயலாளர் கூறினார்.

Update: 2023-12-14 13:59 GMT

வருங்கால சமுதாயத்தினர் நோய் இல்லாமல் வாழ, புதிய கண்டுபிடிப்புகளில் விஞ்ஞானிகள் ஈடுபட வேண்டும் என, அறிவியல், தொழில் நுட்பத் துறை இணைச் செயலாளர் கூறினார். 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தண்ணீர் மாசுபடுவது குறித்தும் அதனால் ஏற்படும் நோய்களை தடுத்து வருங்கால சமுதாயத்தினர் நோய் இல்லாமல் வாழ புதிய கண்டுபிடிப்புகளில் விஞ்ஞானிகள் ஈடுபட வேண்டும் என மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் இணைச் செயலாளர் தனலட்சுமி கூறினார்.

வேலூரில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நீர் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்புக்கான நிலையான தொழில்நுட்பங்கள் குறித்த சர்வதேச கருத்தரங்கு 3 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்க விழா இன்று மாலை நடைபெற்றது . கருத்தரங்கிற்கு வி.ஐ.டி வேந்தர் ஜி. விசுவநாதன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக , மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் இணைச் செயலாளர் தனலட்சுமி கலந்து கொண்டு சர்வதேச கருத்தரங்க மலரை வெளியிட்டார் .

இன்று துவங்கிய இக்கருத்தங்கம் வரும் 16 ஆம் தேதி வரையில் மூன்று நாட்கள் நடக்கிறது . இதில் இந்தியா ஜப்பான்,காந்தகார். உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த அறிவியல் விஞ்ஞானிகளும் மாணவர்களும் பங்கேற்று பல ஆய்வுக்கட்டுரைகளை சமர்பிக்க உள்ளனர் . நிகழ்ச்சியில் பேசிய தனலட்சுமி, நீர் மேலாண்மை என்பது மிகவும் அவசியம். சென்னையில் கடந்த வாரம் பெய்த புயல் மழை காரணமாக 4 நாட்கள் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். புயல்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். புயல் மழை வரும் போது அதன் காரணமாக ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்குகிறது. உணவு இல்லாமல் இருந்து விடலாம் .ஆனால் குடிநீர்ர் இல்லாமல் இருக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். நாம் நீர் மேலாண்மையை கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய இந்திய விஞ்ஞானிகள் கொரோனா காலத்தில் தடுப்பு மருந்து கண்டுபிடித்தனர். அதனை நாம் நம்முடைய நாட்டு மக்களுக்கும் மற்ற நாடுகளுக்கு இலவசமாக வழங்கினோம். முன்பெல்லாம் இந்தியாவை வளர்ந்து வரும் நாடு என்பார்கள். தற்போது இந்தியாவை வளர்ந்த நாடுகள் என்கிறார்கள். நிலத்தடிநீர் மாசுபட்ட தால் புற்றுநோய் போன்ற நோய்கள் உருவாகிறது.

இப்போது இந்த கருத்தரங்கில் நிலத்தடி நீர் ஏன் மாசுபடுகிறது? அதனால் வரும் புற்றுநோய் போன்ற நோய்களை தடுப்பது எவ்வாறு என்பது குறித்து ஆராய்ச்சி செய்து அதற்கு தீர்வு காண வேண்டும். அவ்வாறு தீர்வு கண்டால் அவர்களுக்கு பரிசு வழங்கப்படும். நாம் சுனாமி, புயல்கள் போன்றவற்றை பார்த்துள்ளோம்.மேலும் ஒரு சுனாமி வந்தால் நாடு தாங்காது. நீர் மேலாண்மை குறித்து மத்திய அரசின் ஆலோசனை கூட்டம் ஜனவரி மாதம் 17ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் விஞ்ஞானிகள் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும் என்று அவர் பேசினார்.

Tags:    

Similar News