சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் ஸ்கூட்டர் திருட்டு
தர்மபுரி மாவட்டம், வெண்ணாம்பட்டி காவலர் குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் ஸ்கூட்டர் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-04-12 02:52 GMT
சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் ஸ்கூட்டர் திருட்டு
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெண்ணாம்பட்டி காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் அரிச்சந்திரன் இவர் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 7-ந்தேதி இவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டர் திருட்டு போனது. இது குறித்து பல்வேறு இடங்களில் அவரது ஸ்கூட்டர் தேடி கிடைக்காத நிலையில் நேற்று, இது தொடர்பாக அரிச்சந்திரன் தர்மபுரி நகர பி1 காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்