ராஜ்யபுரஸ்கார் விருதுக்கு சாரண, சாரணியர்கள் தேர்வு
வளவனூர் மாவட்ட பயிற்சி மையத்தில் நடந்த ராஜ்யபுரஸ்கார் விருதுக்கான தேர்வில் 404 சாரண, சாரணியர்கள் கலந்துகொண்டனர்.
Update: 2024-02-08 07:52 GMT
விழுப்புரம் மாவட்ட பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் விழுப்புரம் கல்வி மாவட்ட அளவில் 2023-ம் ஆண்டிற்கான ஆளுனர் விருதுக்கான சோதனை முகாம் வளவனூரில் உள்ள மாவட்ட பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமில் நன்னாடு, மேல்காரணை, சிந்தாமணி, எடப்பாளையம், அதனூர் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 404 சாரண, சாரணியர்களும், 36 சாரண, சாரணிய ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். மாநில பயிற்சியாளர்களான பெருவளூர் சக்கரவர்த்தி, விருத் தாசலம் வீரப்பா, நெய்வேலி பிலோமினாள், செய்யார் லோகநாதன் ஆகியோர் சாரண, சாரணியர்களை சோதித்து, ராஜ்யபுரஸ்கார் விருதுக்கு தகுதிவாய்ந்த சாரண, சாரணியர்களை தேர்வு செய்தனர். இம்முகாமில் மாவட்ட செயலாளர் மணி, மாவட்ட பயிற்சி ஆணையர் துளசிங்கம், அமைப்பு ஆணையர் செல்வம், நன்னாடு ராம்குமார், மேல்காரணை சங்கர், விழுப்புரம் கோபால், அண்ணாமலை ஆகியோர் முகாம் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். முகாமில் சாரணர்களிடம் கூடாரம் அமைத்தல், முடிச்சுகள் செய்து காட்டல் போன்ற பல திறன்கள் பரிசோதிக்கப்பட்டது.