குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அரிவாள் வெட்டு - போலீசார் வழக்கு பதிவு

தூத்துக்குடியில் குடிபோதை ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டியவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Update: 2024-02-17 11:23 GMT

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அரிவாள் வெட்டு - போலீசார் வழக்கு பதிவு

தூத்துக்குடி தாளமுத்துநகர் தாய்நகரைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் முத்துராஜ் என்ற விஜய் (24). இவர் நேற்று முன்தினம் இரவில் தனது நண்பர்களான தூத்துக்குடி தபால் தந்தி காலனியைச் சேர்ந்த ஸ்டாலின் ஜோசப் மகன் ஸ்வீட்டன் ரிஜோ (21), மில்லர்புரம் ஹவுசிங் போர்டைச் சேர்ந்த ராஜா மகன் விக்னேசுவரன் (20) மற்றும் 18 வயது வாலிபர்கள் 2 பேருடன் சேர்ந்து கதிர்வேல்நகர் குப்பைகிடங்கு அருகில் மது குடித்தாராம். அப்போது தபால் தந்தி காலனியை சேர்ந்த சுப்பையா மகன் விக்ரம் (22), ராபர்ட் ஆகிய 2 பேரும் அங்கு வந்தனர். சிறிதுநேரத்தில் முத்துராஜிக்கும், விக்ரமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மதுபோதையில் நடந்த தகராறு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த விக்ரம், ராபர்ட் ஆகிய 2 பேரும் வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து வந்து முத்துராஜை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த முத்துராஜை அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் முத்துராஜின் நண்பர்களான ஸ்வீட்டன் ரிஜோ, ராஜகோபால் நகரைச் சேர்ந்த சந்தோஷ் (20), விக்னேஸ்வரன் (20), மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 6பேர் நள்ளிரவில் தபால்தந்தி காலனியில் உள்ள விக்ரம் வீட்டுக்கு சென்று அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.  இதில் வீட்டின் வளாக முன்பகுதியில் விழுந்த பெட்ரோல் குண்டுகள் வெடித்து தீப்பிடித்தது. உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தனர். இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில், சிப்காட் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக முத்துராஜா அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்குப் பதிந்து விக்ரமை போலீசார் கைது செய்தனர். மேலும் விக்ரமின் அண்ணன் விக்னேஷ்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் திருமுருகன் , ஸ்வீட்டன் ரிஜோ ஆகிய 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News