விவசாயிக்கு அரிவாள் வெட்டு: போலீசார் விசாரணை
சாத்தான்குளம் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டியவரைப் போலீசார் கைது செய்தனா்.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-02 10:39 GMT
கோப்பு படம்
சாத்தான்குளம் அருகேயுள்ள திருவரங்கநேரியை சோ்ந்த விவசாயி ராஜரத்தினம் (60). இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த பெரியநாயகம் மகன் சசி பிரபாகரன் (42) என்பவருக்கும் நிலம் தொடா்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் வயலுக்குச் செல்லும் வழியில் இருதரப்புக்கும் இடையே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறில், ராஜரத்தினத்தை, சசிபிரபாகரன் அரிவாளால் சரமாரியாக வெட்டினாராம். பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சசிபிரபாகரனை புதன்கிழமை கைது செய்தனா்.