எஸ்டிபிஐ கட்சியின் பகுதி கூட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் பாளை பகுதி கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-01 11:43 GMT

பகுதி கூட்டம் 

எஸ்டிபிஐ கட்சியின் பாளை பகுதி கூட்டம் சாந்திநகர் அலுவலகத்தில் வைத்து பாளை பகுதி தலைவர் அரசடி மீரான் தலைமையில்  நடைபெற்றது. பகுதி செயலாளர் சாத்தை நிஜாமுதீன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் ஆரிப் பாட்ஷா,பாளை மஜீத் ஆகியோர் கலந்து கொண்டு வெல்லட்டும் மதசார்பின்மை மாபெரும் மதச்சார்பின்மை மாநாடு குறித்து மீளாய்வு நடத்தினர்.

கூட்டத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது, மாநகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சிறப்பு கவனத்தை எடுக்க வேண்டும், சமாதானபுரம் நீதிமன்றம் எதிராக பிரதான சாலைகளில் மாடுகள் கூட்டமாக திரிவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் செல்கின்றனர். இதனால் விபத்துகளும் ஏற்படுகின்றன. கனமழையால் பாளை மார்க்கெட் சீவலப்பேரி சாலை சிதிலமடைந்த உள்ளது.

இதை போர்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும், மக்கள் பிரதானமாக கூடும் இடமாக இருக்கும் பாளை மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் சாந்தி நகர், ரஹ்மத் நகர், கேடிசி நகர், கோட்டூர், கிளை நிர்வாகிகள் ,சம்சுதீன், நவாஸ், சந்தை ஆசாத், ஸ்டீல் மீரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News