சம வேலைக்கு சம ஊதியம் : இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் இயக்கத்தினர்,பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2024-03-08 08:21 GMT

ஆர்ப்பாட்டம் 

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் இயக்கத்தின் சார்பில் அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவகிருஷ்ணன் தலைமையில் கடந்த 9வது நாட்களாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதாக தேர்தலுக்கு முன்பு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் வாக்குறுதி அளித்ததை குறிப்பிட்டும், அதனை கடந்த மூன்று ஆண்டு காலமாக நிறைவேற்றாததை வலியுறுத்தியும் முழுக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தொடந்து ஆட்சியர் அலுவலகம் முன்பாக கோரிக்கை வலியுறுத்தி கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News