சேலத்தில் இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
Update: 2024-03-08 01:37 GMT
ஆர்ப்பாட்டம்
சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சேலம் மாவட்ட இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று 7-வது நாளாக கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அருள் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் வேலை மட்டும் ஒன்று, ஊதியம் மட்டும் வெவ்வேறா, சம வேலை சம ஊதியம் வழங்கிடு என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தி நின்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.