நரசிங்கம் பெருமாள் கோவில் அருகில் விதைபந்து தூவல்
நரசிங்கம் பெருமாள் கோவில் அருகில் விதைபந்து தூவப்பட்டது.
யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 155 ஆவது வார நிகழ்வாக விதைப்பந்து தூவுதல் நிகழ்வு நரசிங்கம் பெருமாள் கோவில் அருகில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தென்னவன் வரவேற்றார்.
ஆலோசகர் ராகேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக வனவர் மூர்த்தி, தமிழக அரசின் பசுமை சாம்பியன் விருது பெற்ற அசோக்குமார், விஸ்வா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக அசோக்குமார், விஸ்வா ஆகியோருக்கு பசுமை காப்பாளர் விருது வழங்கப்பட்டது.
யானைமலையை சுற்றி 10 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆயிரம் விதைப்பந்துகள் தூவப்பட்டன. சமூக ஆர்வலர் பிரபு தொகுத்து வழங்கினார். ஆலோசகர்கள் கார்த்திகேயன், சிலம்ப மாஸ்டர் பாண்டி, செல்வி, மற்றும் சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விதைப்பந்துகளை தூவினர்.