நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் வாக்கு சேகரிப்பு

திருப்போரூர் பகுதியில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

Update: 2024-04-08 07:12 GMT

பிரச்சாரம்

பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெறுவதையொட்டி அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது திருப்போரூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ் குமார் அவர்களை ஆதரித்து திருப்போரூர் பேருந்து நிலையம் எதிரே சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், 100 நாள் வேலை திட்டம் பொது மக்களை சோம்பேரி ஆக மாற்றி உள்ளது. அதனால் வேளாண் வேலைகளுக்கு ஆட்கள் இல்லாமல் போகி விட்டது. திமுக மாதம் 1000 ரூபாய் பணம் கொடுப்பதற்கு 6 மாதம் முன்பு விளம்பரம் செய்த கட்சி தான் திமுக. அதையே சொல்லி சொல்லி வாக்கு சேகரிக்கும் போது இந்த 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை அல்ல வாக்கு காக கொடுக்கிற காசாக தெரிகிறது.

10வருடமாக மோடி ஆண்டு வருகிறார். வளர்ச்சி வளர்ச்சி என்று கூறி வருகிறார். என்ன வளர்ச்சியை இந்தியா கண்டுள்ளது. சிறிய சிறிய நாடுகளுக்கு கூட சொந்தமான விமானம் உள்ளது. இந்தியாவிற்கு 1 விமானம் உள்ளதா???? விமானமே இல்லாத நாட்டிற்கு எதற்கு விமான நிலையம். இருந்த air india விமானத்தையும் டாடா நிறுவனத்திற்கு விற்பனை செய்து விட்டார்கள். என குற்றம் சாட்டினார்.

Tags:    

Similar News