சீர்காழி: காட்டு பன்றிகள் அட்டகாசம் - பயிர்கள் சேதம்
Update: 2023-12-03 06:34 GMT
சேதமடைந்த கரும்பு பயிர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா, காத்திருப்பு, அல்லிவிளாகம், செம்பதனிருப்பு, ஆலங்காடு, இராதாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் , பொங்கல் கரும்பு மற்றும் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது, கடந்த ஒருசில தினங்களாக, காட்டுப் பன்றிகள் வாழை மற்றும் கரும்பு பயிர்களை, கடித்து நாசம் செய்து வருகிறது, இதனால். விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வனவிலங்குகள் வசிக்கும், அளவிற்கான காடுகள், மயிலாடுதுறை மாவட்டத்தில் இல்லை. கடற்கரையோரமும், கொள்ளிடக்கரையோரமும் மரங்கள் அடர்ந்த பகுதிகள் உள்ளன, வெளி மாவட்டத்திலிருந்து, உணவு தேடி வந்த பன்றிகள் ,ஆங்காங்கே உள்ள கருவைக்காடுகள், போன்றவற்றில் பதுங்கிப், பல்கிப் பெருகியிருக்கலாம். காட்டுப்பன்றிகளால் பாதிக்கப்பட்ட, கரும்பு வாழைப் பயிர்களை, சீர்காழி வனச்சரகர் ஜோசப்டேனியல், தலைமையிலான வனத்துறையினர், பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து நேரில் ஆய்வு செய்தனர். அதற்கான, இழப்பீடு, வழங்க நடவடிக்கைமேற்கொண்டுள்ளனர்.