செய்யாறு திருவோத்தூர் தேர் திருவிழா
செய்யாறு திருவோத்தூர் தேர் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வேண்டுதல்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-17 05:06 GMT
செய்யாறு திருவோத்தூர் தேர் திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவோத்தூர் பகுதியில் அமைந்துள்ள திருஞான சம்பந்தரால் பாடல் பெற்று ஆண் பனையை பெண் பனையாக மாற்றிய அற்புத திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் ரதசப்தமி பிரமோற்சவம் விழா நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக 7 ம் நாளில் விநாயகர் வேதபுரிஸ்வரர் பாலகுஜாம்பிகை ஆகிய மூன்று தேர்கள் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்,மூன்று தேர்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.