செல்லங்குப்பத்தில் முட்புதரில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம் செல்லங்குப்பம் பகுதியில் முட்புதரில் பதுக்கி வைத்த 1 டன் ரேஷன் அரிசி முட்டை பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கெடாரை அடுத்த செய்யப்பட்ட செல்லங்குப்பம் பகுதியில் ரேஷன் அரிசி ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மூட்டைகளை விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற் படத்தில் றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய காணலாம். தகவல் கிடைத்தது, தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், செல்லங்குப்பம் கிராமத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள மாதா கோவில் அருகில் முட்புதருக்குள் 23 சாக்கு மூட்டைகள் கிடந்தன, அதனை போலீசார் பிரித்து பார்த்தபோது, அதில் 1,150 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சிலர், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடமி ருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை மூட்டைகளில் கட்டி வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விழுப்புரம் நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்ப டைத்தனர். மேலும் இந்த அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்தவர் கள் யார் என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதோடு அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்