மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் பறிமுதல்

சாமியார்மடம் பகுதியில் மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் பறிமுதல். வியாபாரி மீது வழக்கு பதிவு.

Update: 2024-03-20 11:54 GMT

காவல்துறை விசாரணை


கன்னியாகுமரி மாவட்டம் சுவாமியார்மடத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலையை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தக்கலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக் டர் சாமுவேல் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 9 பாக்கெட் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக காட்டாத்துறை பகுதியை சேர்ந்த ரெவீந்திரன் (67) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News