வலங்கைமானில் புகையிலை பொருட்கள் பறிமுதல்

வலங்கைமான் பகுதியில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2024-02-02 14:24 GMT

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருள்

வலங்கைமான் பகுதியில் சந்திரசேகரபுரம் கடைவீதியில் வலங்கைமான் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்திரசேகரபுரம் கடைவீதிக்கு குற்றவாளி ஆனவர் இரு சக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக எடுத்து வந்த போதுஅவரை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்ததில் சாதிக் என்பவரின் வெற்றிலை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கூறினார்.

Advertisement

இதனை தொடர்ந்து சாதிக் என்பவரின் வெற்றிலை கடையில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பதிக்கி வைத்திருந்த ஹான்ஸ் 48 பண்டல் ,வி1 குட்கா 52 பண்டல், விமல் பான் மசாலா 37 பண்டல் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்

இதனைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதிக்க வைத்திருந்த வலங்கைமான் தாலுக்கா ஆவூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜ் முஹம்மது என்பவரின் மகன் சாதிக் பாட்ஷா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News