தற்காலிக பட்டாசு கடைகள் - குலுக்கல் முறையில் தேர்வு

Update: 2023-11-08 08:40 GMT

கடைகள் அமைக்க இடம் தேர்வு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள காலியிடங்களில் பட் டாசு கடைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. பண்டிகையை முன்னிட்டு, சேலம்மாவட்டம் கெங்கவல்லி தாலுகாவில் தற்காலிக பட்டாசு கடை வைப்பதற்கு 34 பேர் விண்ணப்பித்திருந்தனர்.குலுக்கல் முறையில் கடைகள் தேர்வுசெய்யப் பட்டு, ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தம்மம் பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன்,ஆர்ஐ முனிராஜ், விஏஓ(பொ) பெரியண்ணன், நாகியம் பட்டி சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இவர்களில், 18பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அருகில், பட்டாசு கடை கள் அமைப்பதற்கு வருவாய்த்துறை சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.போதிய வெளிச்சம் இல்லாததால், தாசில்தார் பாலாஜி தனது ஜீப் வாகனத்தின் ஹெட் லைட் மூலம் குலுக்கலை நடத்தினார்.

Tags:    

Similar News