மதுரை ஏர்போர்ட்டில் நடிகர் விக்ரமுடன் செல்பி

மதுரை விமான நிலையத்தில் நடிகர் விக்ரமுடன் விமான நிலைய துப்புரவு பணியாளர்கள், அதிகாரிகள் புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.;

Update: 2024-06-24 15:10 GMT

மதுரை விமான நிலையத்தில் நடிகர் விக்ரமுடன் விமான நிலைய துப்புரவு பணியாளர்கள், அதிகாரிகள் புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


மதுரை விமான நிலையத்தில் நடிகர் விக்ரமுடன் விமான நிலைய துப்புரவு பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சி - சமூக வலைத்தளங்களில் வைரல்* சித்தா படம் வெற்றியை தொடர்ந்து எஸ். யூ.அருண் குமார் அடுத்த இயக்கத்தில் உருவாகி வரும் படம் வீராதிராசூரன் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சார்பட்டா பரம்பரை நடிகை துஷ்ரா விஜயன் மற்றும் முன்னணி பிரபலங்கள் பலர் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

Advertisement

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மைய கதையாக உருவாகி வரும் வீராதிராசூரன் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நடிகர் விக்ரம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் விக்ரம்மை கண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிலைய துப்புரவு பணியாளர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். விக்ரமுடன் விமான நிலைய ஊழியர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News