வீட்டில் மது விற்பனை - 2 பெண்கள் கைது
வாங்கல் அருகே என்.புதூரில் வீட்டில் மது விற்பனை செய்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-06-23 03:43 GMT
வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக மதுவிலக்கு பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட என். புதூர் பகுதியில் ஜூன் 21ஆம் தேதி மாலை 4 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார் மதுவிலக்கு பிரிவு சிறப்பு காவல் ஆய்வாளர் ரமேஷ். அப்போது, கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுகா, வி என் புதூர், வெள்ளத்தாரை பகுதியைச் சேர்ந்த சசிகுமார் மனைவி இளஞ்சியம் வயது 45 என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் மனைவி மலர்கொடி வயது 50 என்பவரும் அவரவர் வீட்டில் வைத்து மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மது விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் கைது செய்து, அவர்கள் விற்பனை செய்து வைத்திருந்த 18 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், இருவர் மீதும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து இருவரையும் காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வாங்கல் காவல்துறையினர்.