10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செம்பறி, வெள்ளாட்டு கிடா விற்பனை

கொங்கணாபுரம் சனிக்கிழமை வாரச்சந்தையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் செம்பறி மற்றும் வெள்ளாடுகள் விற்பனையானது.

Update: 2024-06-02 02:08 GMT

விற்பனைக்கு வந்திருந்த ஆடுகள் 

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் மே மாத கடைசி வார சனிக்கிழமை சந்தையில் சேலம், நாமக்கல், ஈரோடு,தர்மபுரி,கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் இறைச்சி கடைக்காரர்கள் ஆடுகளை வாங்குவதற்காக ஏராளமானோர் வந்திருந்தனர்.

10 கிலோ எடை உள்ள ஆட்டுக்கிடா 5500 முதல் 7000 வரையும் 20 கிலோ எடையுள்ள செம்பரி கிடா 10 ஆயிரத்து 700 முதல் 14000 வரையிலும் 30 கிலோ எடையுள்ள செம்பரி கிடா 16,000 முதல் 21 ஆயிரம் வரையிலும் விலை போனது. அதேபோன்று வளர்ப்பு ஆட்டுக்குட்டி 2000 முதல் 5000 வரை விற்பனை செய்யப்பட்டது. இதே போல் பந்தய சேவல் கோழி விற்பதற்காகவும் வாங்க ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்திருந்தனர்.

Tags:    

Similar News