செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா

ராமாபுரத்தில் உள்ள, செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் திருவிழா கோலாலகமாக நடந்தது.

Update: 2024-05-24 14:24 GMT

ராமாபுரத்தில் உள்ள, செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் திருவிழா கோலாலகமாக நடந்தது.


மல்லசமுத்திரம் அருகே, ராமாபுரத்தில் உள்ள, செல்வமுத்து மாரியம்மனுக்கு கடந்த 14ம்தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. 22ம்தேதி இரவு 7 மணிக்கு, அம்மை அழைக்கப்பட்டது. 23ம்தேதி மாலை 5மணிக்கு, அலங்கறிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் ஊர்வலம், அலகுகுத்துதல், அக்னிகரகம் எடுத்தல், பூங்கரகம் எடுத்தல், வாணவேடிக்கை, கும்மிஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது. நேற்று24 அதிகாலை 4மணிக்கு ஓம்காளியம்மனுக்கு பெரும்பூஜை நடந்தது. 4;30க்கு, செல்வமுத்து மாரியம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலம், பொங்கல், பெரும்பூஜை, காலை 6மணிக்கு, கும்பம் விடுதல் உள்ளிட்ட நிகழ்சிகளை தொடர்ந்து காலை முதல் மாலை வரையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் மாறு வேடங்கள் அணிந்து உலா வந்தனர். காலை 8 மணிமுதல் மாலை வரையில் அன்னதானம் நடந்தது. இன்று25 காலை மறுஅபிசேகம், மஞ்சள் நீராட்டம் நடைபெறும். நாளை26 பொட்டு சாமிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்சியுடன் திருவிழா முடிவடைகின்றது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News