போதை பொருள் தீமைகள் குறித்து கருத்தரங்கம்

ராமநாதபுரம் கீழக்கரையில் மது மற்றும் போதை பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2024-01-12 10:03 GMT

கருத்தரங்கு

ராமநாதபுரம் மாவட்டம் , கீழக்கரை தனியார் கல்லூரி வளாகத்தில் இராமநாதபுரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் முஹம்மது சதக் கல்விக் குழுமம் இணைந்து மதுபானம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. ராமநாதபுரம் உதவி ஆணையாளர் (கலால்) சிவசுப்புரமணியன், ராமநாதபுரம் கோட்டாய அலுவலர் (கலால்) முருகேசன் ராமநாதபுரம் மதுவிலக்கு மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் ராஜூ ஆகியோர் போதைப் பொருட்கள் பற்றிய தீமைகளை எடுத்து கூறினார்.

தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் சேக் தாவுது, பொறியியல் கல்லூரி முதல்வர் நிர்மல் கண்ணன் , கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜசேகர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் பேராசிரியர் அலிபாபா , கீழக்கரை வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் , மாயாகுளம் கிராம நிர்வாக அலுவலர் காளிதாஸ் , தலையாரி சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். நிகழ்வில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News