கன்னியாகுமரி : வாக்குப்பதிவு இயந்திரங்கள்  பயிற்சிக்காக அனுப்பி வைப்பு

அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

Update: 2023-12-17 10:41 GMT
வாக்கு பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சியினர் முன் திறப்பு.
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையை  மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் மேற்பார்வையில் திறக்கப்பட்டு, பத்மனாபபுரம் மற்றும் நாகர்கோவில் வருவாய் கோட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பும் நிகழ்சி நடைபெற்றது.  இந்நிகழச்சியில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் க.சேதுராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சங்கரநாராயணன், தேர்தல் வட்டாட்சியர் சுசீலா உட்பட துறை அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
Tags:    

Similar News