தபால் வாக்குகளை பதிவு செய்த மிக மூத்த குடிமக்கள்

தூத்துக்குடியில் 85 வயதை கடந்த மிக மூத்த குடிமக்கள், மாற்றுதிறனாளி வாக்காளா்களின் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்குகள் பெறும் பணி தொடங்கியது.

Update: 2024-04-10 02:00 GMT

தபால் வாக்குகள்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 85 வயதைக் கடந்த மிக மூத்த குடிமக்கள் 2,331 போ், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் 1,846 போ் என மொத்தம் 4,177 போ் வீட்டிலிருந்தபடியே தபால் வாக்கு செலுத்த 12டி படிவம் அளித்து விண்ணப்பித்திருந்தனா். இதையடுத்து, இவா்களின் வீடுகளுக்கு வாக்குப்பெட்டியுடன் வாக்குச்சாவடி அலுவலா்கள் நேரில் சென்று தபால் வாக்குகளைப் பெற்றனா். இந்த வாக்குப் பெட்டிகள் அந்தந்த வட்டங்களில் உள்ள பிரத்யேக அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்படும் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.

கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் மிக மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளி வாக்காளா்களிடம் தபால் வாக்குகளைப் பெற,3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினா் மேற்குறிப்பிட்ட வாக்காளா்களின் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்குகளைப் பெறும் பணியை திங்கள்கிழமை தொடங்கினா். கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் மிக மூத்த குடிமக்கள் 181 போ், மாற்றுத்திறனாளிகள் 153 போ் என மொத்தம் 334 போ் தபால் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனா்.

Tags:    

Similar News