குமரி அறிவியல் பேரவை சார்பில் மூத்த விஞ்ஞானிக்கு  விருது

தேசிய தொழில்நுட்ப தினவிழாவை முன்னிட்டு குமரி அறிவியல் பேரவை சார்பில் நடந்த விழாவில் மூத்த விஞ்ஞானி முத்துவிற்கு தொழில்நுட்ப சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

Update: 2024-05-12 06:24 GMT
குமரி அறிவியல் பேரவை சார்பில் மூத்த விஞ்ஞானிக்கு விருது

தேசிய தொழில்நுட்ப தினமாக மே 11-ம் தேதியை வருடந்தோறும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் ஆண்டுதோறும்  தொழில்நுட்ப சாதனையாளர் விருது குமரி அறிவியல் பேரவை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.         இந்த வருடம் இந்திய விண்வெளி துறையில் முன்னாள் விஞ்ஞானி ஏ.பி.ஜே.அப்துல்கலாமுடன் எஸ்.எல்.வி 3 ராக்கெட் தொழில் நுட்பத்தில் பணியாற்றிய மூத்த விஞ்ஞானி முத்து என்பவருக்கு தொழில்நுட்ப சாதனையாளர் விருது நேற்று  வழங்கப்பட்டது.        

இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத்தலைவர் டாக்டர் விஜயகுமார் விருது வழங்கி கௌரவித்தார்.  டாக்டர் ஜேம்ஸ்வில்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு.வேலையன் அறிமுகவுரையாற்றினார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமாகிய நெல்லை சு. முத்து பாராட்டுரை வழங்கினார்.       மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மையத்தின் குழும இயக்குனர் பெருமாள், முன்னாள் துணை திட்ட இயக்குனர் புதியவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். வி.வி.விக்ரம் நிறைவுரையாற்றினார்.       நிகழ்ச்சியில் பேராசிரியர் சி.சஜிவ், ஒருங்கிணைப்பாளர்கள் ஜாண்ரபிகுமார்,  டெசிஜோசப் ஜாண்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இளம்விஞ்ஞானிகள் மலர்செண்டு கொடுத்து மகிழ்வித்தனர்.

Tags:    

Similar News