சேந்தமங்கலம் அரசு பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை

சேந்தமங்கலம் அரசு பள்ளி மாணவி உடுக்கை அடிக்கும் போட்டியில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.;

Update: 2023-12-08 13:14 GMT
மாணவிக்கு பாராட்டு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேந்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி உடுக்கை அடித்து, பாட்டு பாடி பாடும் போட்டியில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். சேந்தமங்கலத்தில் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டி நடந்தது.

சேந்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி நவிர்தனஸ்ரீ வட்டார அளவில் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றார். அப்போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவில் நடந்த கலை திருவிழாவில் இசை பிரிவில் உடுக்கை அடித்து, பாட்டு பாடியதில் மாநில அளவில் 3ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி, பி.டி.ஏ., தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமை விகித்தனர். விழாவிற்கு நாமக்கல் மாவட்ட முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் பங்கேற்று, மாணவிக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் மாணவிக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. விழாவில் உதவி தலைமை ஆசிரியர் வெங்கடாஜலம், ஆசிரியர் மாதேஸ்வரன், இருபால் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News