அரசு மருத்துவக் கல்லூரியில் வெப்ப நோய்களுக்கு தனி வார்டு அமைப்பு !

வெப்பத்தின் தாக்கத்தால் குமரி மாவட்டத்தில் தோல் நோயால் சிலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கும் வகையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-03 05:30 GMT
குமரி அரசு மருத்துவ கல்லூரி 
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. மேலும் வெயிலில் உஷ்ணம் மற்றும் அனலும் அதிகம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோர  வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை ஏற்படுத்தியிருக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இலவச குடிநீர் பந்தல் மற்றும் பானகாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. குடிநீருடன் சேர்த்து ஓ ஆர் எஸ் எனும் உப்பு சர்க்கரை கரைசல் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.வெப்பத்தின் தாக்கத்தால் குமரி மாவட்டத்தில் தோல் நோயால் சிலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி கடந்த இரண்டு மாதத்தில் இதுவரை 32 பேர் தோல் நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வெப்ப தாக்கத்தினால் பாதிக்கப்படுபவர்களுக்கு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கும் வகையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வார்டில் 10 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பத்து படுக்கை கொண்ட தனி வார்டு இன்று வெள்ளிக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
Tags:    

Similar News