சிறுமியிடம் பாலியல் சீண்டல்: 45 வயது நபர் போக்சோவில் கைது
மயிலாடுதுறை அருகே நல்லிச்சேரியில் 11வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 45வயது நபரை போக்சோவில் கைது செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-04 16:08 GMT
கைது செய்யப்பட்டவர்
மயிலாடுதுறை அருகே நல்லிச்சேரி பகுதியை சேர்ந்தவர் தனசீலன் (45)இவருக்கும் பக்கத்து வீட்டு பெண்மணிக்கும் இடப்பிரச்சினையால் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதற்கிடையே பக்கத்து வீட்டு பெண்மணி மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று தனது 11 வயது மகளிடம் தனசீலன் என்பவர் சனிக்கிழமை மாலை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
வீட்டின் சந்தில் எனது மகளின் சத்தம் கேட்டு நான் ஓடி சென்று அவளை அழைத்து விசாரித்த போது என் மகள் இதை கூறினாள் என புகார் அளித்தார். இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாகவள்ளி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தனசீலனை கைது செய்து காவல் அடைத்தார்.